Related Articles
தென்னிந்திய நடிகர் சங்க விழாவில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார்
சிவாஜி தி பாஸ் - இது வரை குவித்த விருதுகள்
சூப்பர் ஸ்டார் ரஜினி ஈரம் திரைப்படத்தின் பாடல்களை வெளியிட்டு வாழ்த்தினார்
சினிமா குடும்ப உறுப்பினர்கள் ரஜினியுடன் படங்களில் பணிபுரிந்தவர்கள்
தலைவர் - ரஜினி வெளியிட்ட ஆவணப் படம்!
Rajinikanth is the right choice for Endhiran! - Sabu Cyril
ஸ்ரீதேவி திருமணம்...தலைவர் வாழ்த்து!
ரத்ததானத்துக்கென்று ரஜினி ரசிகர்கள் துவங்கியுள்ள வெப்சைட்!
Soundharya opens up on Sultan the Warrior
சி.பி.எஸ்.இ. பொது அறிவு பாடத்தில் ரஜினி

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2025 2015 2005
2024 2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

Article
தலைவர் பார்த்த படம் ... மலை மலை
(Tuesday, 25th August 2009)

தலைவர் ஒரு படத்தைப் பாராட்டுகிறார் என்றால் அதன் பின்னணியில் இரு காரணங்கள் உண்டு. இளம் கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும், திரையுலகம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அவர் தீவிர வேலைகளுக்கு இடையிலும் படங்களைப் பார்க்கிறார்.. பாராட்டுகிறார்.

இருதினங்களுக்கு முன் கந்தசாமி படம் பார்த்தார் தலைவர். அப்போது தயாரிப்பாளர் தாணுவுக்கு சில யோசனைகளைச் சொன்னதோடு, அந்தப் படத்தின் விளம்பரத்துக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே 20 நிமிட வீடியோ பேட்டி தந்து தாணுவை நெகிழ வைத்தார்.



அடுத்து தலைவர் பார்த்த படம் மலை மலை. படம் சுமார்தான் என்றாலும், அருண் விஜய் என்ற நடிகரின் உழைப்பை, முயற்சியை அங்கீகரிக்கும் பொருட்டு அவர்களையும் பாராட்டி, புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இந்த தங்கமகனிடம் பாராட்டு பெற்றதை பல விருதுகள் பெற்றதற்கு சமமாக எண்ணி மகிழும் அருண், அடுத்த படத்துக்கு உற்சாகமாகத் தயாராகிவிட்டார்.

-சங்கநாதன்
படம்: www.indiaglitz.com