Related Articles
மக்களுக்கு பயன் தரக் கூடிய பல சமூகப் பணிகளில் ரஜினி ரசிகர்கள்
மணிவண்ணன் மகள் திருமணத்தை சூப்பர் ஸ்டார் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்
10 Reasons to watch Sultan, The Warrior
சூப்பர் ஸ்டார் ரஜினி விஜிபி இல்லத் திருமண விழாவில்
சூப்பர் ஸ்டாருடன் ஒரு சிலிர்க்க வைக்கும் இமயமலைப் பயணம்
தலைவர் பார்த்த படம் ... மலை மலை
தென்னிந்திய நடிகர் சங்க விழாவில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார்
சிவாஜி தி பாஸ் - இது வரை குவித்த விருதுகள்
சூப்பர் ஸ்டார் ரஜினி ஈரம் திரைப்படத்தின் பாடல்களை வெளியிட்டு வாழ்த்தினார்
சினிமா குடும்ப உறுப்பினர்கள் ரஜினியுடன் படங்களில் பணிபுரிந்தவர்கள்

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2025 2015 2005
2024 2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

Article
நட்சத்திரங்களுக்கிடையே உச்ச நட்சத்திரம் - கோலிவுட்டை கலக்கிகொண்டிருக்கும் ஒரு Flashback சந்திப்பு
(Wednesday, 9th September 2009)

கோலிவுட்டின் தற்போதைய பரபரப்பு சமீபத்தில் நடைபெற்ற நட்சத்திர சந்திப்பு தான். 1980 களில் ஜொலித்த நட்சத்திரங்களுக்கான  get-together ஒன்று லிஸ்ஸி ப்ரியதர்ஷன் மற்றும் சுஹாசினி ஆகியோரின் ஏற்பாட்டின்படி ப்ரியதர்ஷனின் வீட்டில் சமீபத்தில் நடைபெற்றது.

இதில் திரளான நட்சத்திரங்கள் கலந்துகொண்டார்கள். சூப்பர் ஸ்டார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். சூப்பர் ஸ்டார் வந்தபோது கைத்தட்டல், விசில் என தூள் பறந்தது கூடுதல் தகவல்.

படங்கள் லீக்கானது நட்சத்திரங்களுக்கு ஒரு பக்கம் அதிர்ச்சியளித்தாலும் ஊடங்களுக்கு ஒரு பக்கம் கொண்டாட்டம் தான்.

இந்த நட்சத்திர கொண்டாட்ட நிகழ்ச்சியில் அனைவரையும் புகைப்படம் எடுத்தது இயக்குனரும் நடிகருமான பிரதாப் போத்தன்.  பிரதாப் போத்தனின் Facebook அக்கவுண்ட்டில் இருந்து இப்படங்கள் லீக்காகி இணையத்தில் ஈ.மெயில் forwarding   மூலமாக பரவியதாக தெரிகிறது.

இந்த சந்திப்பின் ஹைலைட்டே சூப்பர் ஸ்டார் தான் . அவருடன் புகைப்படமெடுத்துக்கொள்ள  அவருடைய முன்னால் கதாநாயகியரிடையே பெரும் தள்ளுமுள்ளே நடந்ததாக கூறப்படுகிறது.

பழைய மாணவர்கள் தாங்கள் படித்த கல்லூரியில் பல ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று கூடுவது போல் இந்த சந்திப்பு “ஆட்டோகிராப்” மகிழ்ச்சிகளை அள்ளி தெளிப்பதாக அமைந்தது.

குறிப்பு 1: மேற்படி விருந்தில் கலந்துகொண்ட நட்சத்திரங்களில், ஃபீல்டில் இன்னும் ஹாட்டாக, அதுவும் முதலாவதாக இருப்பது நமது சூப்பர் ஸ்டார் மட்டுமே.

குறிப்பு 2: இதில் கலந்துகொள்ள அழைக்கபடாத நட்சத்திரங்கள், “எங்களை ஏன் அழைக்கவில்லை? எங்களையும் அழைத்திருக்கக் கூடாதா?” என்று பொருமிக்கொண்டிருப்பதாக தகவல்.