Related Articles
‘அல்ல போலேலோ’ – ஜெயிலர் 2-வின் கொண்டாட்டத்தை தொடங்கி வைத்த தலைவர்! ரிலீஸுக்கு முன்பும்… ரிலீஸுக்குப் பிறகும் செம வைபு!
“அடுத்த பெல் எப்போது?” – பாரதிராஜா, பாக்யராஜ் குறித்து ரஜினியின் நெகிழ்ச்சி
‘தர்மன்’ இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடக்கம் – புதிய லுக்கில் சூப்பர்ஸ்டார்!
10 ஆண்டுகள் கபாலி – ஒரு திரைப்படம் அல்ல... உலகம் கொண்டாடிய தலைவரின் திருவிழா!
'ஜெயிலர் 2' ரிலீஸ் தேதி அறிவிப்பு... கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்! டீசரில் மறைந்திருக்கும் பல சுவாரஸ்யங்கள்!
திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
40 ஆண்டுகால வாக்குறுதி நிறைவேறியது! – ‘தர்மன்’ மூலம் இணைந்த ரஜினி & கமல்
விசுவாசத்தின் விலை என்ன? - ராகவா லாரன்ஸின் அரசியல் நகர்வும், ரஜினி ரசிகர்களின் குமுறலும்
பாரதிராஜா மறைவு: உருக்கமான அஞ்சலி செலுத்திய ரஜினி
"தரங்கெட்ட வேலையை ரஜினிகாந்த் எப்போதும் செய்யமாட்டான்!" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2025 2015 2005
2024 2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

Article
சிவா உண்மையில் தோல்விப் படமா? 75 நாட்களுக்கு மேல் ஓடிய திரையரங்குகள் சொல்லும் பாக்ஸ் ஆபீஸ் உண்மை
(Monday, 31st August 2026)

வேலைக்காரன் வெற்றிக்குப் பிறகு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், கவிதாலயா நிறுவனத்திற்காக நடித்துக் கொடுத்த படம் சிவா.

05.05.1989 அன்று வெளியான இப்படம், இந்தியில் அமிதாப் பச்சன் நடித்த கூனபசினா படத்தின் தழுவலாக உருவானது. இப்படத்திற்கு முதலில் சத்யஜோதி என பெயரிடப்பட்டு, பின்னர் சிவா என மாற்றப்பட்டது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் சௌகார் ஜானகி, ஷோபனா ஆகியோர் இணைந்து நடித்தனர். ரகுவரன், ராதாரவி, வினு சக்ரவர்த்தி, இளவரசன், மாதுரி, தியாகு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

திரைக்கதை மற்றும் வசனத்தை ஆனந்து எழுத, கண்ணன் ஒளிப்பதிவு செய்தார். இசையை ராஜா அமைக்க, அமீர்ஜான் இயக்கியிருந்தார்.

ராஜாவின் இசையில் சூப்பர்ஹிட் பாடல்கள்

ராஜாவின் இசையில் இப்படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக “அடி வான்மதி” பாடல் இன்று வரை பிரபலமாக இருக்கும் பாடல்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

ராஜாதி ராஜா வெற்றியின் மத்தியில் வெளியான சிவா

ராஜாதி ராஜா பாக்ஸ் ஆபீஸில் மிரட்டிக் கொண்டிருந்த நிலையில், அதன் 63வது நாளில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அடுத்த படமாக சிவா வெளியானது.

படத்தில் தலைவரின் காமெடி கலந்த நடிப்பும், அதீத ஆக்ஷன் காட்சிகளும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. ராஜாவின் சூப்பர்ஹிட் பாடல்களும் படத்திற்கு பலம் சேர்த்தன.

எனினும், அதிகப்படியான சண்டைக் காட்சிகள் சில இடங்களில் அலுப்பை ஏற்படுத்தியதுடன், வலுவான திரைக்கதை இல்லாதது விமர்சன ரீதியாக படத்திற்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது.

அதே நேரத்தில், படம் பல திரையரங்குகளில் நீண்ட நாட்கள் ஓடி வசூல் செய்தது. 19 அரங்குகளில் 50 நாட்களும், 9 அரங்குகளில் 75 நாட்கள் வரையும் ஓடியதாக குறிப்பிடப்படுகிறது.

சென்னையில் அதிகபட்சமாக ஆல்பர்ட் வளாகத்தில் 91 நாட்கள் ஓடியது.

50 நாட்கள் ஓடிய திரையரங்குகள்

சென்னை

  • ஆல்பர்ட் – 63 நாள்
  • சக்தி அபிராமி – 63 நாள்
  • உதயம் – 63 நாள்
  • கிரவுன் பிருந்தா – 63 நாள்

NSC ஏரியாவில் தொடர்ந்து 6 வாரங்கள் பின் ஷிப்ட்டில் 50 நாட்கள் கண்டது.

பிற பகுதிகள்

  • பாடி – சிவசக்தி
  • அடையாறு – ஈராஸ் (Second Release)
  • சேலம் – சந்தோஷ்
  • திருப்பத்தூர் – மீனாக்ஷி
  • ஈரோடு – அபிராமி
  • மதுரை – சினிபிரியா
  • மதுரை – மினி பிரியா
  • மதுரை – அமிர்தம்
  • நாகர்கோவில் – கார்த்திகை
  • தர்மபுரி – ஸ்ரீ மாதேஷ்வரா
  • திருச்சி – மாரிஸ் – 58 நாள்
  • கோவை – கே.ஜி. வளாகம்
  • கோவை – ராகம்
  • கோவை – கங்கா
  • நெல்லை – PVT – 42
  • நெல்லை – செந்தில் – 56
  • கரூர் – அஜந்தா

75 நாட்களுக்கு மேல் ஓடிய திரையரங்குகள்

  • சென்னை – ஆல்பர்ட் – 91 நாள்
  • சென்னை – சக்தி அபிராமி – 77 நாள்
  • சென்னை – உதயம் – 76 நாள்
  • சேலம் – சாந்தம் – 76 நாள்
  • கோவை – கங்கா – 80 நாள்
  • மதுரை – சினிபிரியா – 76 நாள்
  • மதுரை – அமிர்தம் – 76 நாள்
  • ஈரோடு – அபிராமி – 76 நாள்
  • நாகர்கோவில் – கார்த்திகை – 84 நாள்
  • திருச்சி – மாரிஸ் – 86 நாள் (58 நாள் + ஷிப்ட்டிங் 28 நாள்)
  • கொழும்பு – கேபிட்டல்

இரண்டாம் கட்ட வெளியீடுகளிலும் வசூல்

சிவா படத்தின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம், முதற்சுற்று திரையரங்குகளில் படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே இரண்டாம் கட்ட அரங்குகளிலும் வெளியிட்டு வசூல் பார்த்தது.

குறிப்பாக சென்னை மிட்லண்ட் அரங்கில் பகல் காட்சியாக வெளியிடப்பட்டு 6 வாரங்கள் ஓடியது. அதேபோல் கணபதிராம், ஈராஸ், வடசென்னை அரங்குகள் உள்ளிட்ட பல இரண்டாம் கட்ட அரங்குகளிலும் படம் வெளியானது.

படம் வெளியான பிறகும் இரண்டு ஆண்டுகள் வரை பல்வேறு அரங்குகளில் வெளியாகி வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது.

100 நாட்கள் இல்லை... ஆனாலும் லாபம்!

சிவா 100 நாட்கள் ஓடவில்லை. ஆனால் பல்வேறு அரங்குகளில் தொடர்ந்து நடைபெற்ற வெளியீடுகள் மற்றும் இரண்டாம் கட்ட அரங்குகளின் வசூல் மூலம், படத்தை தயாரித்த கவிதாலயா நிறுவனம் போட்ட முதலீட்டை லாபகரமாக மீட்டெடுத்தது.

ஒரு திரைப்படத்தின் வெற்றியை 100 நாள் ஓட்டத்தால் மட்டுமே அளவிட முடியாது என்பதற்கு சிவா ஒரு நல்ல உதாரணமாக அமைந்தது.

கவிதாலயா நிறுவனம் அடுத்ததாக மூன்று ஆண்டுகள் கழித்து தயாரித்த படம் தான், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மற்றொரு மாபெரும் வெற்றிப்படமான அண்ணாமலை.