Related Articles
இணையத் தமிழ் மென்பொருளறிஞர்
எடுத்தோம் கவிழ்த்தோம் என்று தலைவர் செயல்பட மாட்டார்!
ரஜினி ஒரு வகையில் எனக்கு தெய்வம்தான்
Best Rajini guest role film - Poll Result
1980-ல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!
சினிமா ரசிகர்கள் சங்கத்துக்கு ரஜினிபேன்ஸ்.காம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது!
எந்திரன் - தி ரோபோ - ஒரு முதல் பார்வை!
ரஜினியும் கர்நாடக சொத்துக்களும்!
பாபா குசேலன் இந்த இரு படங்களுமே கடும் பாதிப்புகளுக்குள்ளாயின
Rajinikanth at Arun Pandiyan Daughter Wedding Reception

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2025 2015 2005
2024 2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

Article
இது ஒரு மிக அரிய புகைப்படம்...
(Tuesday, 16th September 2008)

இது ஒரு மிக அரிய புகைப்படம்...

வழக்கமாக நமது தலைவர் ரஜினியின் காலில்தான் மற்றவர்கள் விழுந்து ஆசி வாங்கிப் பார்த்திருப்பீர்கள். அப்படிப்பட்ட உங்களுக்கு இது மிக வித்தியாசமான புகைப்படம்தானே...
அமரர் கவியரசு கண்ணதாசன் மீது மிகவும் அன்பும் மதிப்பும் கொண்டவர் நமது தலைவர் ரஜினி அவர்கள்.

உற்சாகமாக இருக்கும் தருணங்களில், சிவசம்போ.... போன்ற கவியரசரின் பாடல்களை எப்போதும் வாய்விட்டு ரசித்துப் பாடுவாராம் சூப்பர் ஸ்டார் ரஜினி. கவியரசருக்கும் ரஜினி மீது தனிப்பட்ட அன்பு.

எண்பதுகளின் ஆரம்ப நாட்களில் ரஜினி சூப்பர்ஸ்டார் என்ற சிகரத்துக்கு வந்துவிட்ட நேரம்.
ஒரு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினியும் கண்ணதாசனும் பங்கேற்றனர். வழக்கமாக தாமதமாக வரும் கண்ணதாசன் விழாவுக்கு முன்கூட்டியே வந்துவிட்டார். எப்போதும்போல சரியாக நேரத்துக்கு வந்த ரஜினி, கவியரசரைப் பார்த்ததும் விரைந்து போய் அவரது காலில் விழுந்து தனது மரியாதையையும் அன்பையும் வெளிப்படுத்தினார்.

ஒரு மிகப் பெரிய சூப்பர்ஸ்டார் என்ற பந்தா கிஞ்சித்தும் இல்லாத வெள்ளை உள்ளம் கொண்ட ரஜினிக்கு மனதார ஆசி கூறி, வாயார வாழ்த்திப் பேசினார் கவியரசர் அந்த மேடையில்.

English Version:

Kanndasan’s blessings to Thalaivar!

Usually, we have seen the pictures in which our Thalaivar blessing others who touch his feet. But here is a rare picture of our Thalaivar who got blessed by the great poet of this century Kannadasan.

Rajini always respected Kannadasan and he is one of the greatest fans of Kannadasan’s literary works.

Both Rajini and Kannadasan have once attended an event in Chennai as Chief Guests. It was the period when Rajini attained the status of Superstar in Tamil Cinema.

Usually, Kannadasan came late to most of the functions. But for that particular event, Kannadasan came in much before the time mentioned in the invitation.

As usual Rajini entered the event hall at correct time. He was shocked when seeing Kannadasan in the stage. Suddenly Rajini went to the stage and touched Kannadasan’s feet and seeking his blessings.

Kannadasan was shocked to see such a great admiration and respect from a superstar of his time. He blessed Rajini a lot and later praised him for his love and patience towards his profession and seniors in the industry.

-Sanganathan