Related Articles
எந்திரன்: கழிந்தது முதல் திருஷ்டி!
ரஜினிக்காக காத்திருக்கும் பூர்வீக கிராமம்
ரஜினிகாந்த், ஒரு உன்னத மனிதர் - ஐஸ்வர்யாராய்
பலர் இப்போது குசேலனில் வரும் சுந்தர்ராஜன் கேரக்டர் மாதிரிதான் மாறியிருக்கிறார்கள்!
தலைவரின் தடபுடலான பேட்டியும், தாய்மார்களின் மகிழ்ச்சியும்...
If God proposes we can start party - Rajini speech during fans meet
இலங்கையில் நடக்கும் யுத்தத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் "“ ரஜினி ஆவேச பேச்சு
Thappu Thalangal - Rajini and climax left the viewers spell bound
நான் தலைவர்னு சொல்றது சூப்பர் ஸ்டார் ரஜினியை - நயன்தாரா !!
முதன் முதலாக நம்பியார் தலைமையில் ரஜினி சபரிமலைக்குச் சென்றார்

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2025 2015 2005
2024 2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

Article
சத்திக்கு தற்காலிக ஓய்வு: மன்றப் பணிகளில் சுதாகர்!
(Monday, 17th November 2008)

உடல் நலக்குறைவு காரணமாக அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்தியநாராயணாவுக்கு தற்காலிக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதில் மன்றப் பணிகளை ரஜினியின் நண்பர் சுதாகர் கவனிக்கிறார் என ராகவேந்திரா கல்யாண மண்டப நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மன்றப் பொறுப்புகளிலிருந்து சத்தியநாராயணா நீக்கப்படவில்லை என்றும், இதுகுறித்து தலைவர் ரஜினியிடமிருந்து முறையான எந்த அறிவிப்போ அறிக்கையோ வெளிவராத நிலையில் இதுபற்றி எதுவும் பேசுவது சரியில்லை. அதிகாரப்பூர்வமற்ற எந்த செய்தியையும் நம்பாதீர்கள் என்றும் அறிவித்துள்ளனர்.

சிறுநீரகக் கோளாறு காரணமாக சத்தியநாராயணா அவதிப்பட்டு வருவதாலும், அண்மையில் அவரின் தாயார் காலமானதால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாலும் கொஞ்ச நாளைக்கு மன்றப் பணிகளிலிருந்து அவரை விடுவித்திருப்பதாக ரஜினியே சமீபத்திய ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்பில் குறிப்பிட்டது நினைவிருக்கலாம்.

அதையே இப்போது பெரிய அளவில் செய்தியாக்கி விட்டது மீடியா. எனவே தலைமை மன்றத்திலிருந்து ரஜினியின் முறையான அறிவிப்பு வரும் வரை இந்த விஷயம் பற்றி ரசிகர்கள் அலட்டிக் கொள்ளாமலிருப்பதே நல்லது!

இதுகுறித்து ராகவேந்திரா மண்டப முக்கிய நிர்வாகி நம்மிடம் கூறியதாவது:

சுதாகர் சாரை மன்றத் தலைவராகவோ அல்லது வேறு என்தப் பொறுப்புக்கோ தலைவர் கொண்டு வந்துவிடவில்லை. இது ஏற்கெனவே பேசி வைத்த முடிவுதான். சத்தி உண்மையிலேயே ரெஸ்டில் இருக்கிறார். மண்டபத்துக்கு வரும் செய்திகள் மற்றும் தகவல்களை முறையாக தலைவரிடம் கொண்டுபோய் சேர்ப்பது இப்போது சுதாகர்தான். வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அப்படி ஏதாவது நடந்தால் நம்ம தலைவர் அதை ரகசியமாகச் செய்பவரல்ல...” என்றார்.

இதுகுறித்து சத்தியநாராயணாவின் கருத்து விரைவில் வெளியிடப்படும்.

-சங்கநாதன்